/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு
/
மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 26, 2024 06:40 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் உள்ள முக்கோட்டீஸ்வரர் கோவில் அருகே குளம் உள்ளது. அதை துார் எடுத்து குளத்தை சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்காக, 'அம்ருத் - 2.0' திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் அருகே உள்ள ஏகவள்ளி அம்மன் கோவில் குளத்தை துார் எடுத்து, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனுடன், பிரபு நகர் மற்றும் குரு கிருபா நகரில் உள்ள பூங்காக்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த மூன்று பணிகளுக்கும் சேர்த்து, 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான, 'டெண்டர்' விடப்பட்ட நிலையில், விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

