தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/நகராட்சியில் 10 மாடுகள் பறிமுதல்

நகராட்சியில் 10 மாடுகள் பறிமுதல்

நகராட்சியில் 10 மாடுகள் பறிமுதல்


ADDED : நவ 18, 2026 08:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 08:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக உலா வந்த 10 மாடுகளை, இன்று (நவ.,18) நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள ஜெ.என்., சாலை, சி.வி.நாயுடு சாலை, பெரியகுப்பம் ரயில் நிலைய சாலை, தேரடி – செங்குன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், மாடுகள் தினமும் உலா வருகின்றன.

சாலை நடுவிலும், சாலையோரங்களிலும் ஓய்வெடுக்கும் மாடுகள், திடீரென சாலை நடுவிலும் வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் ஸ்தம்பித்து, விபத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாலையில் கால்நடைகள் உலவவிட கூடாது என, கலெக்டர் கவிதா எச்சரிக்கை விடுத்தும், மாடுகளின் உரிமையாளர்கள், அதனை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலெக்டர் கவிதா உத்தரவின் பேரில், திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் சந்தானம் தலைமையில், சுகாதார அலுவலர் மோகன் மற்றும் ஊழியர்கள் இன்று, திருவள்ளூர் நகரில், சுற்றித்திரிந்த, 10 மாடுகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், ‘மாடுகளை சாலைகளை திரிய விட்டால், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்’ என, கமிஷனர் சந்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us