/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' :கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' :கலெக்டர் அலுவலகத்தில் மனு
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' :கலெக்டர் அலுவலகத்தில் மனு
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' :கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : டிச 30, 2025 04:28 AM
திருவள்ளூர்: வேலஞ்சேரி ஊராட்சியில், நுாறு நாள் வேலை வழங்க, பணிதள பொறுப்பாளருக்கு 500 ரூபாய் வரை கேட்பதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ஊராட்சி, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
வேலஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், கிராம மக்களுக்கு நுாறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
வெங்கடாபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள பணிதள பொறுப்பாளர், ஒவ்வொருவரிடமும் 200 - 500 ரூபாய் கொடுத்தால் தான், பணி செய்ய அனுமதி வழங்குகிறார். இதுகுறித்து, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, ஏழை தொழிலாளிகளிடம் பணம் கேட்கும் பணிதள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து, வேறு ஒருவரை அப்பணியில் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

