/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வில்வித்தை போட்டியில் 12 வயது சிறுமி சாம்பியன்
/
வில்வித்தை போட்டியில் 12 வயது சிறுமி சாம்பியன்
ADDED : அக் 01, 2025 01:26 AM

பொன்னேரி;பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 12 வயது சிறுமி சாம்பியன் பட்டம் பெற்றார்.
பொன்னேரி, கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மகள் வெனிசாஸ்ரீ, 12. வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பொன்னேரியில் வில்வித்தை பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்று உள்ளார். நேற்று முன்தினம், சென்னை நேரு விளையாட்டு அரங்கில், தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார்.
இதில், அதிக புள்ளிகள் பெற்று தங்கப தக்கமும், சாம்பியன் பட்டமும் பெற்றார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வரும் நவம்பரில் நடைபெறும், தேசிய பள்ளிகளுக்கான வில்வித்தை போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடுவதற்கு தகுதி பெற்று உள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்