/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆயுத பூஜை 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஆயுத பூஜை 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 01, 2025 12:11 AM
திருத்தணி:ஆயுத பூஜை, விஜயதசமி என, தொடர் விடுமுறையால் வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, திருத்தணியில் இருந்து, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இ தனால், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நேற்று காலை முதல், திருச்சி, புதுச்சேரி, திருச்செந்துார், விழுப்புரம், மதுரை, வேலுார், சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதே போல் வெளியூரில் இருந்து மீண்டும் திரும்பி வருவதற்கு, வரும் 5ம் தேதி காலை முதல் திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என பணிமனை கிளை மேலா ளர் தெரிவித்தார்.