/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி சட்டசபை தொகுதியில் 14 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
/
கும்மிடி சட்டசபை தொகுதியில் 14 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
கும்மிடி சட்டசபை தொகுதியில் 14 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
கும்மிடி சட்டசபை தொகுதியில் 14 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
ADDED : அக் 01, 2025 12:07 AM
கும்மிடிப்பூண்டி:வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் கூடுதலாக, 14 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒரு ஓட்டுச்சாவடியில், 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதலாக இருக்கும் பட்சத்தில் , அந்த ஓட்டுச்சாவடியை இரண்டாக பிரித்து புதிதாக ஒரு ஓட்டுச்சாவடி உருவாக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நொச்சிக்குப்பம், போந்தவாக்கம், விவேகானந்தா நகர், புதுகும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம், தேர்வழி, கும்மிடிப்பூண்டி மேட்டு தெரு உள்ளிட்ட, 14 ஓட்டுச்சாவடிகளில், 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அந்த ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்து, அதன் அருகே புதிய ஓட்டுச்சாவடி ஏற்படுத்தும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சமுதாய கூடம், கிராம சேவை மையம், தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஓட்டுச்சாவடிக்கு தேவையான வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், 14 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து, 344 ஓட்டுச்சாவடிகள் செயல்படும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.