ADDED : ஜூன் 20, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரேஸ்புரம் கிராமத்தில் கூடல்வாடி பட்டரை ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்த, 17 பனை மரங்கள் கடந்த 12ம் தேதி பொக்லைன், இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பனை மரங்களை செங்கல் சூளைக்கு பயன்படுத்த வெட்டி சாய்ப்பது அதிகரித்து உள்ளது. பரேஸ்புரத்தில் மூன்றாண்டுக்கு முன் 30 பனைமரங்கள் செங்கல் சூளைக்கு அனுப்ப வெட்டி சாய்க்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.