/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சித்தியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் மீட்பு
/
சித்தியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் மீட்பு
ADDED : நவ 29, 2024 09:51 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நோயாளிகளை வீடுகளில் தங்கி கவனிக்கும் செவிலியராக பணி செய்து வந்தார்.
நான்கு மாதங்களாக பணி இல்லாமல், வீட்டில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து மாயமானதாக, கடந்த 25ம் தேதி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில், அவரது தாய் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபருடன் மாயமானது, தெரியவந்தது.
போலீசார் தேடி வருவது குறித்த தகவல் அறிந்த நிலையில், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தங்களது வழக்கறிஞர்களுடன் நேற்று முன்தினம் இருவரும் சரணடைந்தனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் கூறியதாவது:
அந்த வாலிபர், சித்தி முறை கொண்ட 24 வயது உறவுக்கார பெண்ணை, கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். விசாரணையின் போது, இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்ல சம்மதித்தனர். பின், இருவரும் அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

