/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகைக்கடையில் 2 சவரன் செயின் திருட்டு
/
திருத்தணி நகைக்கடையில் 2 சவரன் செயின் திருட்டு
ADDED : செப் 07, 2025 10:20 PM
திருத்தணி:திருத்தணி ஜோதிசாமி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 40. இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று மாலை, 35 வயது மதிக்க ஆண் ஒருவர், நகைக்கடைக்கு வந்து, பணியில் இருந்த ஊழியரிடம், புது டிசைன் செயினை காட்டுமாறு கூறியுள்ளார்.
பெண் ஊழியர் காட்டிய நகைகளை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை எனக் கூறி சென்றார். சிறிது நேரம் கழித்து, பெண் ஊழியர் பார்த்த போது, 2 சவரன் செயின் திருடுபோனது தெரிய வந்தது. 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்த போது, மர்ம நபர் 2 சவரன் செயினை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.