/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டையில் டிராக்டர் 'ஓட்டிய' 2 வயது குழந்தை பலி
/
ஆர்.கே.பேட்டையில் டிராக்டர் 'ஓட்டிய' 2 வயது குழந்தை பலி
ஆர்.கே.பேட்டையில் டிராக்டர் 'ஓட்டிய' 2 வயது குழந்தை பலி
ஆர்.கே.பேட்டையில் டிராக்டர் 'ஓட்டிய' 2 வயது குழந்தை பலி
ADDED : ஏப் 21, 2025 02:40 AM
ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை அடுத்த சானுாா் மல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன். இவர், தன் 2 வயது மகன் சஷ்வினுடன், அதே பகுதியில் உள்ள வயலுக்கு, நேற்று முன்தினம் மாலை, டிராக்டர் வாகனத்தில் சென்றார்.
கியரில் வைத்தபடியே டிராக்டரை, 'ஆப்' செய்தார்; சாவி, டிராக்டரிலே பொருத்தப்பட்டு இருந்தது. குழந்தையை, ஓட்டுநர் சீட்டில் உட்கார வைத்துவிட்டு, டிராக்டரின் பின்பக்க பெட்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை, சாவியை திருகியதில் திடீரென இயங்கிய டிராக்டர், மெல்ல நகர்ந்தது. பதற்றமடைந்து குழந்தை குதித்ததில், சீட்டின் கீழ் இருந்த, 'கிளட்ச் லிவர்' ரிலீஸ் ஆகி, டிராக்டர் குலுங்கி குலுங்கி சென்றது.
அப்போது, திடீரென கீழே விழுந்த குழந்தை, டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தது.
பதறியடித்து ஓடிய தந்தை அருள்பாண்டியன், டிராக்டரை நிறுத்தி, குழந்தையை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

