/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கனமழையில் 21,750 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
/
திருவள்ளூரில் கனமழையில் 21,750 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
திருவள்ளூரில் கனமழையில் 21,750 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
திருவள்ளூரில் கனமழையில் 21,750 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
ADDED : டிச 15, 2024 11:24 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில், சில தினங்களாக கன மழை பெய்தது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின.
இந்த ஆண்டு, சம்பா பருவத்தில் 1 லட்சத்து, 25,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.
இதில், அறுவடைக்காக காத்திருந்த பயிர்கள் என, மாவட்டம் முழுதும் 21,750 ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
மூழ்கிய பயிர்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில், அதிகபட்சமாக மீஞ்சூரில் 4,000 ஏக்கர், கும்மிடிப்பூண்டியில் 3,000 ஏக்கர், கடம்பத்துாரில் 2,000 சோழவரத்தில் 3,500 ஏக்கர் என, மாவட்டம் முழுதும், 14 ஒன்றியங்களில் மொத்தம் 21,750 ஏக்கரின் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
விளைநிலங்களில் தண்ணீர் வடிந்த பின், சேதமடைந்த பயிர்கள் குறித்து தெரிய வரும் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.