/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி உப கோவில்களில் 26 காலியிடத்திற்கு 2,350 பேர் விண்ணப்பம்
/
திருத்தணி உப கோவில்களில் 26 காலியிடத்திற்கு 2,350 பேர் விண்ணப்பம்
திருத்தணி உப கோவில்களில் 26 காலியிடத்திற்கு 2,350 பேர் விண்ணப்பம்
திருத்தணி உப கோவில்களில் 26 காலியிடத்திற்கு 2,350 பேர் விண்ணப்பம்
ADDED : டிச 13, 2025 06:00 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உப கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முதற்கட்டமாக நேர்காணல் நடந்தது. இதில் 400 பேர் பங்கேற்றனர்.
திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களான மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் கோவில், சந்தான வேணுகோபாலபுரம், வேணுகோபால சுவாமி ஆகிய கோவில்களில், கூர்க்கா, இரவு காவலர், மிருதங்கம், புஜங்கம் குடைக்காரர், மாலைக்கட்டி, தமிழ்புலவர், சமயபிரசங்கி, சித்த மருத்துவர், செவிலியர், ஓட்டுநர், கணினி இயக்குபவர், நாதஸ்வர வித்வான் உட்பட, 26 காலி பணியிடங்கள் உள்ளன.
இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, திருத்தணி கோவி ல் நிர்வாகம் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த பணியிடங்களில் சேர்வதற்கு, 6ம் வகு ப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பித்திருந்தனர். 26 காலி பணியிடங்களுக்கு 2,350 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
முதற்கட்டமாக நேற்று 400 பேரிடம் நேர்காணல், அரக்கோணம் சாலையில் உள்ள கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் ரமணி , அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

