/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஸ்வக்சேனா கல்லுாரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
/
விஸ்வக்சேனா கல்லுாரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
விஸ்வக்சேனா கல்லுாரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
விஸ்வக்சேனா கல்லுாரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 07, 2025 11:14 PM

திருவள்ளூர், விஸ்வக்சேனா மகளிர் கலைக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பகுதியில், விஸ்வக்சேனா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் நேற்று, இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி தலைவர் சி.பி.மூவேந்தன் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் சம்யுக்தா மூவேந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் கலீனா வரவேற்றார். நிர்வாக இயக்குநர் நாச்சியப்பன் கல்லுாரி குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக புதுடில்லி தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் தெற்கு மண்டல உறுப்பினர், முனைவர் எஸ்.மணி பங்கேற்று, 2019 - 2022 மற்றும் 2020 - 2023ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார்.
மேலும், வணிகவியல் துறையில் மாணவி சரண்யா, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.