ADDED : நவ 09, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: சின்னம்மாபேட்டையில் மேய்ச்சலுக்கு சென்ற, மூன்று பசுக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்டது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு, கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக வீட்டில் கட்டி வைக்கப்படும் கால்நடைகள், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை, சிலர் குறிவைத்து திருடி செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.,8) மாலை, சின்னம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம், 40, யுவராஜ், 38, முனுசாமி, 37, ஆகியோரின் மூன்று பசுக்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து, தணிகாசலம் என்பவர் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
