/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாரில் அனுமதியின்றி சரக்கு விற்பனை 30 பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

ADDED : ஆக 08, 2025 10:37 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அரசு டாஸ்மாக் மதுக்கூடத்தில் அனுமதியின்றி சரக்கு விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில், அரசு டாஸ்மாக் மதுக்கூடத்தில், அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக, டி.எஸ்.பி., தமிழரசி என்பவருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டி.எஸ்.பி., உத்தரவின்படி, தனிப்படை போலீசார் நேற்று காலை அரசு டாஸ்மாக் மதுக்கூடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மதுக்கூடத்தில் இருந்த சங்கர், 51, என்பவர், கள்ளத்தனமாக சரக்கு விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து, 30 குவார்ட்டர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசார், சங்கரை கைது செய்து, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், சங்கரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனர்.