/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொங்கலுக்கு 4 நாள் 'நம்ம ஊரு திருவிழா'
/
பொங்கலுக்கு 4 நாள் 'நம்ம ஊரு திருவிழா'
ADDED : நவ 28, 2025 03:36 AM
சென்னை: தமிழகத்தில், நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், மாநகர மக்களுக்கும் நாட்டுப்புற கலை அனுபவத்தை வழங்கவும், தமிழக அரசு 'நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், முன்னணி நகரங்களில் கலை விழாக்களை நடத்துகிறது.
அந்த வகையில், சென்னையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நான்கு நாட்கள் இந்த விழாவை நடத்த கலை பண்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 1,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும், 500க்கும் மேற்பட்ட செவ்வியல் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய இசையான மங்கல இசை, தவில் இடம்பெறும். தொடர்ந்து, நையாண்டி மேளம், தோல் பாவைக் கூத்து, மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

