/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை கண்ணுார் பகுதி மக்கள் அவதி
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை கண்ணுார் பகுதி மக்கள் அவதி
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை கண்ணுார் பகுதி மக்கள் அவதி
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை கண்ணுார் பகுதி மக்கள் அவதி
ADDED : நவ 28, 2025 03:37 AM

கண்ணுார்: கண்ணுார் ஊராட்சியில் ஜல்லி கற்களாக மாறிய ஒன்றிய சாலையால் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கண்ணுார் ஊராட்சி. மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சிக்கு செல்லும் ஒன்றிய சாலை மோசமான நிலையில் இருந்தது.
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறையின் 2020--21ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்றிய சாலை சீரமைக்கப்பட்டது.
இதில் ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாதால் சாலை பணிகள் நிறைவடைந்து மூன்று மாதத்தில் சேதமடைந்த சாலை மீண்டும் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த சாலை ஆங்காங்கே பல இடங்களில் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்ணுார் பகுதியில் ஆய்வு செய்து ஒன்றிய சாலையை சீரமைக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

