/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிப்பர் லாரிகளால் நாசமாகிறது ஞானகொல்லிதோப்பு சாலை
/
டிப்பர் லாரிகளால் நாசமாகிறது ஞானகொல்லிதோப்பு சாலை
டிப்பர் லாரிகளால் நாசமாகிறது ஞானகொல்லிதோப்பு சாலை
டிப்பர் லாரிகளால் நாசமாகிறது ஞானகொல்லிதோப்பு சாலை
ADDED : நவ 28, 2025 03:38 AM

ஆர்.கே.பேட்டை: ஓயாமல் இயங்கி வரும் டிப்பர் லாரிகளால், தார் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஊராட்சிக்கு உட்பட்டது ஞானகொல்லிதோப்பு கிராமம். இந்த கிராம மக்கள், தங்களின் அன்றாட பணிகள் காரணமாக, அருகில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு தினசரி சென்று வருகின்றனர்.
ஞானகொல்லிதோப்பில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான டிப்பர் லாரிகள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகையில் செயல்பட்டு வரும் கல் குவாரிக்கு இந்த லாரிகள் வந்து செல்கின்றன.
டிப்பர் லாரிகள் பயணிக்கும் அளவிற்கு, ஞானகொல்லிதோப்பு கிராம சாலை வலுவானதாக இல்லை. இதனால், இந்த பகுதியில் தார் சாலை சேதம் அடைந்துள்ளது.
குண்டும் குழியுமாக மாறியுள்ள இந்த மார்க்கமாக சோளிங்கருக்கு செல்லும் பகுதி மக்களும், வயல்வெளிக்கு செல்லும் உள்ளூர் விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். தார் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

