/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
562 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி
/
562 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி
ADDED : செப் 29, 2024 12:50 AM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகங்கள், 6 கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. நேற்று, உலக வெறி நாய் தினாத்தையொட்டி, கால்நடை மருந்தகங்களில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
திருத்தணி, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை ஆகிய கால்நடை மருந்தகங்களில் நடந்த சிறப்பு முகாமில், திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, 23 கால்நடை மருந்தகங்களில் உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மொத்தம், 544 நாய்களுக்கும், 18 பூனைகளுக்கும் என, 562 செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் செல்லப்பிராணிகளுக்கு, மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.