/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி வீணாகும் ரூ.60 கோடி கட்டங்கள் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
/
பராமரிப்பின்றி வீணாகும் ரூ.60 கோடி கட்டங்கள் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
பராமரிப்பின்றி வீணாகும் ரூ.60 கோடி கட்டங்கள் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
பராமரிப்பின்றி வீணாகும் ரூ.60 கோடி கட்டங்கள் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
ADDED : நவ 11, 2024 03:18 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் 60.55 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றபட்ட அரசு திட்டங்கள் வீணாகி போனதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி பகுதியில் பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக ஆண்கள், பெண்கள் சுகாதார வளாகங்கள், சமுதாய கூடங்கள், மண்புழு உரக்கொட்டகை, மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் கட்டப்பட்டன.
இதில் 526 ஊராட்சிகளிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தலா 5.50 லட்சம் மதிப்பில் 28.93 கோடி மதிப்பில் மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
இந்த சுகாதார வளாகங்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டத்தின் தன்மைக்கேற்ப பெயரளவிற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று அனைத்து சுகாதார வளாகங்களும் சேதமடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது.
இதேபோல் கடந்த 2017-- 2018ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 526 ஊராட்சிகளிலும் 5.26 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளில் சேகரிக்கும் குப்பையில் மண்புழு உரம் தயரிக்கும் வகையில் மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டன. இந்த அனைத்து மண்புழு உரக்கொட்டகைளும் பயன்பாட்டிற்கு வராமல் அமைக்கப்பட்ட சுவடே தெரியாமல் வீணாகி போகியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தலா 5.00 லட்சம் மதிப்பில் 526 ஊராட்சிகளிலும் 26.30 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் கட்டப்பட்டன. அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்களும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதோடு வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
புதுமாவிலங்கை ஊராட்சியில் கடந்த 2004ம் ஆண்டு, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், மத்திய அரசின் உலக சர்வதேச தொழிலாளர் அமைப்பு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்துடன் கூடிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையம் பயன்பாடில் உள்ள நிலையில் சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
மேலும், ஊராட்சி பகுதிகளில் அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அதிகாரிகள் சரியான திட்டமிடல் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் 60.55 கோடி ரூபாய் அரசு பணம் வீணாவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து அரசு கட்டடங்கள் மற்றும் அரசின் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.