/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறையினர் 60 பேர் கைது

ADDED : ஜன 08, 2025 12:44 AM

திருவள்ளூர்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வளர்ச்சி துறை அலுவலர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று, திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு, மாவட்ட செயலரும், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருமான மணிசேகர் முன்னிலையில், மாவட்ட தலைவர் மில்கி ராஜேஷ் தலைமையில் நடந்தது.
போராட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வினை மேலும் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 56 ஆண் மற்றும் 4 பெண் என, 60 பேரை, போலீசார் கைது செய்து அரசு பேருந்து வாயிலாக, திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.