ADDED : மே 21, 2025 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பேருந்து, ரயில் வாயிலாக, தமிழக ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் நேற்று, திருத்தணி ரயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ரயில் நிலையம் அருகே பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.