/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு வீடுகளில் 7 சவரன் நகை திருட்டு
/
இரு வீடுகளில் 7 சவரன் நகை திருட்டு
ADDED : செப் 28, 2025 11:37 PM
பொதட்டூர்பேட்டை:இரு வீடுகளில் 7 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த கீச்சலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 59. இவர், சென்னையில் வசிக்கும் தன் மகன் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கீச்சலத்தில் உள்ள இவரது வீடு நேற்று திறந்து கிடப்பதாக, அவரது உறவினர்கள் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர்.
கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரையடுத்து, பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
l ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரை சேர்ந்தவர் தணிகைமணி, 49. இவரும், இவரது மகளும் கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு திருப்பதிக்கு சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் இவரது வீட்டின் கதவு திறந்து இருப்பதாக, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தணிகைமணிக்கு தகவல் தெரிவித்தனர். தணிகைமணி, வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை, 24 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரை யடுத்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.