/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கடைகளில் சோதனை 70 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
/
திருத்தணி கடைகளில் சோதனை 70 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
திருத்தணி கடைகளில் சோதனை 70 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
திருத்தணி கடைகளில் சோதனை 70 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
ADDED : ஜன 08, 2025 12:52 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர் போன்றவை பயன்படுத்தக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது என, நகராட்சி நிர்வாகம் மக்கள் இடையே கலைநிகழ்ச்சி, துண்டு பிரசுரம், ஆட்டோ பிரசாரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், நகரில் பெரும்பாலான கடைகள், பூ, காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் அதிகளவில் தடை செய்த பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் மேற்பார்வையில், துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று, அரக்கோணம் சாலை, சித்துார் சாலை மற்றும் சன்னிதி தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது, கடைகளில் பதுக்கி வைத்திருந்த, 70 கிலோ பிளாஸ்டிக் கவர், டம்ளர் போன்றவை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும், கடைகாரர்களுக்கு பிளாஸ்டிக் கவர் தவிர்க்க வேண்டும் என எச்சரித்தும், முதற்கட்டமாக, 6,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.