/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க 78 பண்ணை குட்டை பணி தீவிரம்
/
ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க 78 பண்ணை குட்டை பணி தீவிரம்
ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க 78 பண்ணை குட்டை பணி தீவிரம்
ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க 78 பண்ணை குட்டை பணி தீவிரம்
ADDED : செப் 23, 2024 12:44 AM

திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களில், மொத்தம், 145 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை மற்றும் விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் மாவட்ட நிர்வாகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நுாறு நாள் தொழிலாளர்கள் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, முதற்கட்டமாக, 78 பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு, மொத்தம், 2.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையும் வழங்கியது.
தற்போது நான்கு ஒன்றியங்களிலும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில், இடவசதிக்கு ஏற்றவாறு பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுகிறது.
அதிகபட்சமாக ஒரு பண்ணை குட்டைக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது ஊராட்சிகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இது குறித்து திருத்தணி ஊரக வளர்ச்சி உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் கோமதி கூறியதாவது:
ஊராட்சிகளில் நுாறு நாள் தொழிலாளர்கள் கொண்டு பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குறைந்த பட்சம், 15 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட குட்டைகள் அமைக்க வேண்டும். அதிகபட்சமாக, 45 மீட்டர் நீளம் மற்றும் 45 மீட்டர் அகலம் கொண்ட குட்டைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
குட்டைகளின் ஆழம், 1.5 மீட்டர் இருக்க வேண்டும். பணி முடிப்பதற்கு, 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பணிகளை ஒன்றிய பொறியாளர், மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.