/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டமாக திரியும் நாய்கள் திருவாலங்காடு மக்கள் பீதி
/
கூட்டமாக திரியும் நாய்கள் திருவாலங்காடு மக்கள் பீதி
கூட்டமாக திரியும் நாய்கள் திருவாலங்காடு மக்கள் பீதி
கூட்டமாக திரியும் நாய்கள் திருவாலங்காடு மக்கள் பீதி
ADDED : நவ 10, 2025 01:48 AM

திருவாலங்காடு: திருவாலங்காடில் உள்ள சாலைகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
திருவாலங்காடு பஜார் மற்றும் சாலைகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கடிக்க விரட்டுகின்றன.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர்.
மேலும், பஜார் பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளை துரத்துகின்றன. இதனால், பஜாருக்கு வரவே பெண்கள், முதியவர்கள் அச்சப் படுகின்றனர்.
மேலும், குழந்தைகளை கூட கடைகளுக்கு அனுப்ப, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். நாய்களுக்கு பயந்து, பள்ளிகளுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் மாணவ - மாணவியரை, பெற்றோர் பள்ளி நுழைவாயிலில் காத்திருந்து, வீடுகளுக்கு அழைத்து வரவேண்டிய அவலநிலை உள்ளது.
இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் அச்சத்தில் உள்ளனர்.
அதேபோல், அரசு மேல்நிலை மற்றும் துவக்கப் பள்ளி வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இவை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

