/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் 'விறுவிறு'
/
ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் 'விறுவிறு'
ADDED : நவ 10, 2025 01:48 AM

திருத்தணி: திருத்தணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 1.70 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.
திருத்தணி ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது ரயில் நிலையம் எதிரே அறிவுசார் நுாலகம் அருகே இய ங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில், தினமும் 100க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று செல்கின்றனர்.
தற்போது, ஆரம்ப சுகாதார நிலையம் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருவதால், புறநோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் சிகிச்சை பெறுவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, திருத்தணி நகராட்சி நிர்வாகம், திருத்தணி - சித்துார் சாலையில், ராஜிவ் காந்தி நகர் பகுதியில், 12,000 சதுரடியில், 1.70 கோடி ரூபாய் மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணியை கடந்த மாதம் துவக்கியது. தற்போது, கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி கூறியதாவது:
தற்போது இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர்.
புதிய கட்டடம் கட்டும் பணிகளை துவங்கியுள்ளோம். மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் திறக்கப்படவுள்ளது. இங்கு, உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெறும் வகையில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

