/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
/
திருத்தணி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ADDED : மே 26, 2025 02:02 AM

திருத்தணி, மே 26--
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இதன் காரணமாக, பொது வழியில் மூலவரை தரிசிக்க இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
பவானியம்மன் கோவில்
தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள், குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.
நேற்று பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித்தது. பக்தர்கள் வேப்ப இலை ஆடை அணிந்தும், கோழியை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தியும் வழிபட்டனர்.