ADDED : அக் 27, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: முன்விரோதம் காரணமாக, பெண்ணை தாக்கிய, முனுசாமி, 35, என்ற நபரை, போலீசார் இன்று (அக்.,27) கைது செய்தனர்.
திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 33. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முனுசாமி என்பவருக்கும் இடையே, முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (அக்.,26), ஷர்மிளா வீட்டில் குளித்து விட்டு வந்தபோது, முனுசாமி அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த முனுசாமி, ஷர்மிளாவை கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, ஷர்மிளா கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, முனுசாமியை இன்று கைது செய்தனர்.
