/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ., மண்டையை உடைத்த போதை ஆசாமிக்கு 'வலை'
/
எஸ்.ஐ., மண்டையை உடைத்த போதை ஆசாமிக்கு 'வலை'
ADDED : டிச 24, 2024 12:23 AM
சென்னை, அண்ணா நகர், ஏழாவது பிரதான சாலையில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபு, 33. பெங்களூரில் பணிபுரிந்த இவரது தம்பி பாலாஜி, 30 என்பவர், இரு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். பிரபு வீட்டில் தங்கிருந்த பாலாஜி, தினமும் மதுபோதையில் குடியிருப்பில் உள்ள மற்றவர்களுக்கு இடையூறாக, ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், குடியிருப்பின் மாடியில் மதுபோதையில் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து, காவல் கட்டுபாட்டு அறைக்கு குடியிருப்புவாசிகள் புகார் அளித்தனர். இதை விசாரிக்க, அண்ணா நகர் போலீஸ், சிறப்பு எஸ்.ஐ., ரமேஷ் அங்கு வந்தார். அவரை கண்டித்த போது, அருகில் இருந்த சிறிய கட்டையால், ராமேஷை தாக்கிவிட்டு பாலாஜி தப்பினார். இதில், ரமேஷுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, ரமேஷ் அளித்த புகாரின் படி பாலாஜியை அண்ணா நகர் போலீசார் தேடி வருகின்றனர்.