/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகமாக மாறிய மனு எழுதும் கூடம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகமாக மாறிய மனு எழுதும் கூடம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகமாக மாறிய மனு எழுதும் கூடம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகமாக மாறிய மனு எழுதும் கூடம்
ADDED : மார் 05, 2024 06:32 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி அளித்து வருகின்றனர்.
மனுவிற்கு 70 - 100 ரூபாய் வரை பொதுமக்களிடம் இருந்து மனு எழுதுபவர்கள வசூலித்தனர். கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த சுந்தரவல்லியிடம் பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து, மனு எழுதிக் கொடுக்க அரசு அலுவலர் மற்றும் மகளிர் குழுவினரை பணியில் அமர்த்தினார்.
அதற்கடுத்த ஆண்டு, மனு எழுதுவதற்கான தனி கூடத்தையும் திறந்து வைத்தார். அதற்கு பின் பல்வேறு கலெக்டர்கள் மாறுதலாகி வந்த நிலையில், இந்த கூடத்தில், இலவசமாக மனு அளிக்கும் அலுவலர்கள் நியமிக்கப்படாததால், மீண்டும் தனி நபர்கள் வந்து, மனு எழுதிக் கொடுத்து, பணம் வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று இந்த கூடத்திற்கு அருகில், மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய சிற்றுண்டி திறக்கப்பட்டு, மனு அளிக்கும் கூடம் உணவகமாக மாற்றப்பட்டது.
இதனால், வழக்கம் போல் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மனு எழுதுவோர், மரத்தடியிலும், நடைபாதையிலும் அமர்ந்து சிரமத்துடன் மனு தயாரித்தனர்.
எனவே மனு எழுதி தர மாற்று ஏற்பாடு செய்யுமாறு, பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

