ADDED : ஜூலை 03, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:நீர்வரத்து கால்வாய் பராமரிக்கப்படாததால் கிராம பொது குளம், குப்பை தொட்டியாக மாறி வருகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய், நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இக்கிராமத்தில் நீர்வரத்து கால்வாயையொட்டி பொது குளம் உள்ளது.
நீண்டகாலமாக குளத்திற்கு நீர்வரத்து தடைபட்டுள்ளதால், குளம் வறண்டுள்ளது. தெருவில் குவியும் குப்பை, காற்றில் பறந்து குளத்தில் விழுகிறது. இதனால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
எனவே, குளத்தை சீரமைத்து, நீர்வரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.