/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 04, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது பத்ரகாளியம்மன் கோவில்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கோவில் நிர்வாகத்தால் கோவில் வாயில் பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. கோவில் பின்புறம் முறையாக சுற்றுச்சுவர் இல்லாததால் கோவில் பகுதியில் கால்நடைகள் உலா வருகின்றன. சேதமடைந்த கோவில் சுற்றுச்சுவரை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.