/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்கரையில் சேவல் சண்டை போலீசை கண்டிதும் ஓட்டம்
/
செங்கரையில் சேவல் சண்டை போலீசை கண்டிதும் ஓட்டம்
ADDED : அக் 21, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, செங்கரை கிராமத்தில் சேவல் சண்டை நடப்பதாக ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சாந்தி உத்தரவின்படி ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது செங்கரை கிராமத்தில் வயல்வெளியில் சேவல் சண்டை நடப்பது தெரிந்தது.
போலீசாரை கண்டதும் சேவல் உரிமையாளர்கள் தங்களது சேவல்களை எடுத்துக் கொண்டு வயல் வெளியில் தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த எட்டு டூ- வீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.