/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
/
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
ADDED : நவ 01, 2024 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், தருண்,17. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன் தினம் மாலை, தனது தந்தையின், ஸ்பிளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தருண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.