ADDED : நவ 20, 2026 04:36 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில், புதிய ஆதார் சேவை மையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் இன்று (நவ.,20) திறந்து வைத்தார்.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், சண்முக பத்மாவதி நகர் பகுதியில், புதிய ஆதார் சேவை மையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் திறந்து வைத்து கூறியதாவது:
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நேரடியாக இயக்கப்படும் ஆதார் சேவை மையம், பாதுகாப்பான, தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் உயர் தர ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் ஆதார் சேவை மையத்தின் வாயிலாக, பொதுமக்கள் ஆதார் பதிவு, மக்கள் தொகை விபரம், ‘பயோமெட்ரிக்’ புதுப்பித்தல், பிழை திருத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், ஒரே இடத்தில் பெறலாம்.
ஆதார் சேவை மையம், அரசு பொது விடுமுறை நாட்களை தவிர, வாரத்தின் ஏழு நாட்களிலும் செயல்படும்.
மேலும், பொதுமக்கள் https://bookappointment.uidai.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இங்கு ஆதார் சேவைகளை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
