/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'
/
ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'
ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'
ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'
ADDED : பிப் 15, 2024 08:23 PM

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரம் செல்லும் கூட்டுச்சாலையில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து சிலர் கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்தனர்.
தற்போது, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், திருத்தணி--- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை இருபுறமும் அகலப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னிகாபுரம் கூட்டுச்சாலையில் மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த மூன்று கடைகளை அகற்றி, 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுபாலம் கட்டும் பணி, கடந்த 12 நாட்களுக்கு முன் துவக்கப்பட்டது.
தற்போது கால்வாய் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சிறுபாலம் பணியால், அரக்கோணம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இரவு - பகலாக பாலப் பணியை விரைந்து முடித்து, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.