/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் கட்சி கொடி அமைத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
/
சாலையில் கட்சி கொடி அமைத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
சாலையில் கட்சி கொடி அமைத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
சாலையில் கட்சி கொடி அமைத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 17, 2025 09:35 PM
திருவள்ளூர்:'சாலையோரம் மற்றும் மைய தடுப்புகளில் கட்சி மற்றும் இதர அமைப்புகள் கொடிகள் அமைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அனைத்து அரசியல் கட்சிகளும், மத்திய - மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலைகளின் இரு பக்கங்களிலும், மைய பகுதியிலும், கட்சி கூட்டம் நடைபெறும் நாட்கள், அரசியல் கட்சி தலைவர்களின் விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டத்தின் போது, தற்காலிகமாக கொடி கம்பங்களை அமைக்கின்றனர்.
இதனால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படும் பகுதிமக்கள், நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்கின்றனர். அவர்களுக்கான இழப்பீட்டு தொகை, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
அவ்வாறு கொடிகள் அமைக்கும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலையின் இருபக்கம் மற்றும் மைய பகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்கள் கொடிகள் அமைக்க கூடாது.
அவ்வாறு அமைத்தால், அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.