/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளிக்கு ரூ.1.63 கோடியில் கூடுதல் கட்டடம்
/
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளிக்கு ரூ.1.63 கோடியில் கூடுதல் கட்டடம்
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளிக்கு ரூ.1.63 கோடியில் கூடுதல் கட்டடம்
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளிக்கு ரூ.1.63 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : செப் 11, 2025 09:51 PM
திருத்தணி:அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார்.
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதை தொடர்ந்து, திருத்தணி பொதுப்பணி துறையினர், 31வது நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், நான்கு புதிய வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீர் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க தீர்மானித்து, 1.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நேற்று திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் பங்கேற்று, பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
இப்பணிகள் ஆறு மாதத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.