/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரிசி கடத்தல் கண்காணிக்க போலீசாருக்கு அறிவுரை
/
அரிசி கடத்தல் கண்காணிக்க போலீசாருக்கு அறிவுரை
ADDED : மார் 13, 2024 11:09 PM
கும்மிடிப்பூண்டி:ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஆந்திராவுக்கு அதிகளவில் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அருகே பொம்மாஜிகுளம், எளாவூர், ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆந்திர எல்லையோர சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனை சாவடிகளை, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன தணிக்கை குறித்து கேட்டறிந்தார். தமிழக ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது மீதான வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
தொடர் வாகன சோதனையிலும் கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

