/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
/
நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
UPDATED : நவ 20, 2024 01:58 AM
ADDED : நவ 19, 2024 07:20 PM
பொன்னேரி:மீஞ்சூர் வேளாண் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு, 33,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது பனி, வெயில், மழை என, மாறி மாறி வரும் தட்பவெப்ப சூழ்நிலையால், நெற்பயிர்கள் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
கோளூர், அனுப்பம்பட்டு, சிறுவாக்கம், இலவம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் ஏற்பட்டு, வளர்ச்சி பாதித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை துறையிடம் முறையிட்டதை தொடர்ந்து, நேற்று மீஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் தலைமையில், வேளாண் அலுவலர் செல்வகுமார் மற்றும் வேளாண்மை துறை உதவி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பூச்சிகளை கட்டுப்படுத்துவற்கு தேவையான மருந்தினங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலாசனை தெரிவித்தனர்.
வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் கூறியதாவது:
தட்பவெப்ப நிலை மாறுதல் காரணமாக, இலை சுருட்டு புழு தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல், அசாடிரக்ட்டின் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, 1 ஏக்கருக்கு, 400 மி.லி., தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
ப்ளூபெண்ட்மைட், 50 கிராம், குளோரான்ட்ரினிலிபுரோல், 60 மி.லி., இவற்றில் ஏதாவது ஒன்றை, 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
பயிர் பாதுகாப்பு சம்பந்தமான சந்தேகம் இருப்பின், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.