/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேற்காடில் 21ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
திருவேற்காடில் 21ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 17, 2025 02:10 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல், குண்டும் குழியுமாக உள்ளன. கொசு மருந்தும் அடிப்பதில்லை.
வீட்டு வரி, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். வீடு கட்ட, கட்டட அனுமதி பெறுவதில், பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கு காரணமான திருவேற்காடு நகராட்சியையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 21ம் தேதி காலை, திருவேற்காட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலர் பரமசிவம், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.