/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.25 கோடி ஒதுக்கீடு
/
ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.25 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 24, 2024 11:48 PM

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான் பேட்டையில் உள்ள ரயில்வே கேட் வழியாக, சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் மின்சார ரயில்கள் செல்கின்றன.
இதனால், ஒரு நாளைக்கு பலமுறை கேட் மூடி திறந்து விட வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, காலை நேரத்தில் அரைமணி நேரத்திற்கு மேல் கேட் மூடுவதால் பள்ளி, கல்லுாரி பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி, அன்வர்திகான்பேட்டை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் வாயிலாக, 24.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, மேம்பாலம் கட்டும் பணிகள் கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. சோளிங்கர் காங்., - எம்.எல்.ஏ., முனிரத்தினம் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று பூமி பூஜை மற்றும் அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இதில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சுந்தரம், தாசில்தார் சண்முகசுந்தரம், ஒன்றிய சேர்மன் நிர்மலா, மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.