ADDED : நவ 20, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்தவர் தங்கவேல், 73. நேற்று காலை கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று மாலை உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

