/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்மடம் ஆரணி ஆற்றுக்கரை சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு

ADDED : மே 28, 2025 02:18 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக பயணிக்கும் ஆரணி ஆறு, பழவேற்காடு ஏரியில் முடிகிறது.
இப்பகுதியில் ஆற்றின் கரைகள் சேதமடைந்து உள்ளன.
கடந்த ஆண்டு மழையின்போது, சேதமடைந்த பகுதிகளில் போடப்பட்ட மணல் மூட்டைகளும், மண்ணும் சரிந்து கிடக்கின்றன. மழைக்காலம் துவங்கும் முன், கரைகளை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், மழைநீரில் கரைகள் அடித்துச் செல்லப்படுவது தொடர் கதையாக இருக்கிறது.
ஆரணி ஆறு முடியும் பகுதியாக, ஆண்டார்மடம் கிராமம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறோம்.
கான்கிரீட் சுவர்கள் அமைத்து, கரைகளை பலப்படுத்த வேண்டும். மேலும், ஆற்றில் இருந்து சவுடு மண்ணை கொட்டி, கரைகளை அமைக்காமல், களிமண், செம்மண் உள்ளிட்டவைகளை கொண்டு கரைகளை பலப்படுத்தினால், மழைநீரில் கரைகள் அரித்து செல்வதை தடுக்கலாம். இந்த ஆண்டு மழைக்கு முன், இப்பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.