/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவிலில் ஆனி தெப்ப உத்சவம்
/
வீரராகவர் கோவிலில் ஆனி தெப்ப உத்சவம்
ADDED : ஜூன் 21, 2025 06:57 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மூன்றாம் நாள் ஆனி தெப்ப உத்சவம், வரும் 25ம் தேதி துவங்குகிறது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்ப உத்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆனி அமாவாசையான, வரும் 25 முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் தெப்ப உத்சவம் நடைபெற உள்ளது.
இதில், நாள்தோறும் மூலவர் வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயாருக்கு முத்தங்கி சேவையில் அருள்பாலிப்பர். மேலும், வரும் 25 - 27ம் தேதி வரை மூன்று நாட்கள், மாலை 6:00 மணியளவில் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருள்வார்.
பின், சிறப்பு பூஜைகள் நடந்ததும், குளக்கரையை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவைக் காண காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகளை வீரராகவர் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.