/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.36.13 கோடி நிதி ஒதுக்கீடு
/
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.36.13 கோடி நிதி ஒதுக்கீடு
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.36.13 கோடி நிதி ஒதுக்கீடு
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.36.13 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : மே 14, 2025 11:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நடப்பாண்டில் 337 பணிகள் மேற்கொள்ள 36.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கடந்த 2006ம் ஆண்டு, அப்போதைய தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, மாவட்டந்தோறும் அடிப்படை வசதியில் பின்தங்கிய கிராமங்கள், ஒன்றியம் வாரியாக தேர்வு செய்யப்பட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அந்த நிதியில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சாலை, தெருவிளக்கு, குளம் துார்வாருதல், சுடுகாடு சீரமைத்தல், குடிநீர், விளையாட்டு மைதானம், நுாலகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆட்சி மாறியதும், அத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்ததும், 2021ம் ஆண்டு முதல் மீண்டும் புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. நடப்பு 2025 - 26ம் ஆண்டிற்கு, தமிழகம் முழுதும் 1,087 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேற்கொள்வதற்காக, 36.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியில், 13 ஒன்றியங்களில், 337 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, ஊரக வளர்ச்சி துறையினர் நிர்வாக உத்தரவு வழங்கியுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.