/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் விமரிசை
/
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 06, 2025 03:17 AM

திருத்தணி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசியால் மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், திருத்தணி யில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில், தாட்சாயிணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை அன்னாபிஷேக வைபவம் நடந்தது. சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த சிவனை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அதேபோல், புது கும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர், சந்திரசேகரேஸ்வரர் , சுண்ணாம்புகுளம் காளத்தீஸ்வரர், ரெட்டம்பேடு வில்வநாதேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.
அதேபோல், கடம்பத்துார் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

