/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணை மின் நிலைய பணி பழையனுாரில் பூமி பூஜை
/
துணை மின் நிலைய பணி பழையனுாரில் பூமி பூஜை
ADDED : நவ 06, 2025 03:18 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே துணை மின் நிலைய கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.
திருவாலங்காடு அடுத்த பழையனுார் கிராமத்தில், 2021ம் ஆண்டு 110/33/11 கிலோவாட் திறனில், 15 கோடி ரூபாயில் துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம், 50 ஊராட்சிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும்.
ஒப்புதல் வழங்கி நான்கு ஆண்டுகளாகியும் பணி துவங்காமல் இருந்தது. மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்று துணை மின்நிலைய பணிக்கு பூமி பூஜை போட்டு, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இதில், திருவள்ளூர் மற்றும் திருவாலங்காடு மின்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு மின்துறை அதிகாரி கூறியதாவது:
கடம்பத்துார், மோசூர், ராமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, இதுவரை மின்சாரம் கிடைத்தது. இதனால், மழைக்காலங்களில் திருவாலங்காடு சுற்றுப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
தற்போது, துணை மின் நிலையம் அமைவதால் தீர்வு கிடைத்துள்ளது. முதற்கட்ட பணி ஆரம்பமாகி உள்ளது. விரைந்து பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

