/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலையில் கல்லை போட்டு பழைய குற்றவாளி கொலை மணவாளநகரில் பரபரப்பு
/
தலையில் கல்லை போட்டு பழைய குற்றவாளி கொலை மணவாளநகரில் பரபரப்பு
தலையில் கல்லை போட்டு பழைய குற்றவாளி கொலை மணவாளநகரில் பரபரப்பு
தலையில் கல்லை போட்டு பழைய குற்றவாளி கொலை மணவாளநகரில் பரபரப்பு
ADDED : நவ 06, 2025 03:19 AM

மணவாளநகர்: மணவாளநகரில் சரித்திர பதிவேடு ரவுடியை தலையில் கல்லை போட்டு நசுக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடம்பத்துார் அடுத்த வெங்கத்துார் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில், வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக, மணவாளநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் பாருக் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது, இறந்த நபரை தலையில் கல்லை போட்டு நசுக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் மணவாளநகர், கபிலர் நகரைச் சேர்ந்த நவீன், 24, என்பது தெரிந்தது.
இவர், கஞ்சா விற்பனை, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்தர பதிவேடு குற்றவாளி.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

